தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,728 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 2,731 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 1,03,573 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,55,587 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் மேலும் 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 36,805 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 674 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27,06,370 ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 12,412 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வரை 118 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 105 பேர் குணமடைந்தும், 13 பேர் சிகிச்சையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட…
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…