தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை…!
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை ஆகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வரை,தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து,35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்,மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் மதுவை வாங்கிச் சென்றனர்.இதனால்,மதுப்பாட்டில்கள் பெருமளவில் விற்பனையாகின.
இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.42.96 கோடி,மதுரையில் ரூ.49.54 கோடி,திருச்சியில் ரூ.33.65 கோடி,என மொத்தம் ரூ.165 (ரூ.164.87) கோடி அளவுக்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.