தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் 27 மற்றும் 28ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் தான் வடகிழக்கு பருவமழை முழுதாக முடிந்தது. அதன் பிறகு அவ்வப்போது ஒரு சில இடங்களில் வளிமண்டல சுழற்சி காரணாமாக மிதமான மழை பெய்து வருகிறது.
அதே போல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.