கார்ப்பரேட் மற்றும் சனாதனம்ஆகிய 2ம் தான் மோடி அரசின் கொள்கை என திருமாவளவன் விமர்சனம்.
சென்னை சைதாப்பேட்டையில் விசிக சார்பில் இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்,தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்பட்டத்தை கண்டித்து, சமாதானத்தை வேர் அறுப்போம்,மொழி போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒவ்வொரு தேசிய இன மக்களும் தங்களுக்கு என ஒரு தேசம் அமைத்து கொள்ள உரிமை உண்டு; இந்திய ஆட்சி நிர்வாகம் கூட்டாட்சி அமைப்பு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகள் அடிப்படையில் தான் இந்திய அரசு செயல்பட வேண்டும்; மாநில அரசு இருக்க கூடாது,மொழி உணர்வு இன உணர்வு இருக்க கூடாது என பாஜக நினைக்கிறது.
இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கை தான் காரணம்; கார்ப்பரேட் மற்றும் சனாதனம்ஆகிய 2ம் தான் மோடி அரசின் கொள்கை. தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்டுகிறது. தமிழ்நாட்டில் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்; அதை மற்ற காட்சிகள் செய்கிறதோ இல்லையோ விசிக செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்எஸ்எஸ் காரர்கள் சமூக வலைதளங்களில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்; அவர்களது சித்தாந்தம் ஆபத்தானது அதை நான் எதிர்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …