வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வளிமண்டல கீழடுக்க சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வானிலை ஆய்வு மையம் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.
இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!
அவர் கூறுகையில், இலங்கை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே வேளையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலைகொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுபெறும்.
டிசம்பர் 3ஆம் தேதி இது புயலாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 4ஆம் தேதி வட தமிழகம் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 59 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் ஆவடி பகுதியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இன்னும் நான்கு தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும்.
டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும், 2ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் 3ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரையில், தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் இன்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும். டிசம்பர் 1ஆம் தேதி 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும். மூன்றாம் தேதி 60 முதல் 70 கலந்த நேரத்தில் காற்று வீசப்படும். நான்காம் தேதி 60 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துளளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…