தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் 59 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் தொடர்ந்து 13 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.