தமிழகத்தில் ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 74,167 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 3,756 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 64 பேர் உயிரிழப்பு என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 3,051 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.