9 முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.பின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…