#Breaking:3 ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது,முறைகேடு புகார்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக,சென்னையில் நேற்று போக்குவரத்துக்கு துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை திடீர் சோதனை நடத்தியது.அதில் ரூ.35 லட்சத்தை பறிமுதல் செய்தது.
இந்நிலையில், சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.