தமிழகத்தில் 500 டாஸ்மாக் மூடல்.! வரையறைகளின்படி கடைகளை தேர்ந்தெடுக்கும் பணி துவக்கம்.!
தமிழகத்தில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதன் பொருட்டு அதற்கான கணக்கெடுப்பு வேலைகள் நடைபெற துவங்கியுள்ளன.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரும் நோக்கில், முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அறிவித்து இருந்தார். கலைஞரின் நூற்றான்டு பிறந்தநாளை முன்னிட்டு மதுவிலக்கு துவக்கம் பெரும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, 50 மீட்டர் தொலைவில் அருகருகே உள்ளே கடைகள், வருமானம் குறைவாக உள்ள கடைகள், வழிபாடு தளங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள கடைகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் கடைகள் என கணக்கெடுத்து அதில் 500 கடைகளை மூட டாஸ்மாக் ஆயத்தீர்வை முடிவு எடுத்துள்ளது. தமிழகத்தில் 5000க்கும் அதிகமான கடைகள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடதக்கது.