ஒரே நாளில் 798 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 18,325 பேர் வீடுதிரும்பியதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 21 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 18,325 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 16,279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.