எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் – சசிகலா

Default Image

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது என சசிகலா பேட்டி. 

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி நீக்கியது செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், வி.கே.சசிகலா அவர்கள் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது போல் உள்ளதே? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் இது கால சூழ்நிலை என பதிலளித்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ 4 பேர் முடிவு செய்ய முடியாது; கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கவோ நீக்கவோ முடியும், இது எம்ஜிஆர் வகுத்து தந்த திட்டம்.

அதிமுக யாராலும் அசைக்க முடியாத கோட்டை; தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். விரைவில் மேல்முறையீடு செய்வேன். பாஜக வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக்கட்சி தொடங்கினால் அவர்கள் வளரத்தான் நினைப்பார்கள். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும்; ஜெயலலிதாவின் வாக்கை நிறைவேற்றுவதே என் கடமை. எனது 33 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவும் கடந்து போகும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்