#Breaking:மதுரையில் 50 பேருக்கு ‘கரும்பூஞ்சை’ தொற்று உறுதி ..!

Default Image

மதுரையில் 50 பேருக்கு ‘கருப்பு பூஞ்சை’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில்,தற்போது அடுத்த அச்சுறுத்தலாக பிளாக் ஃபங்கஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது.அதாவது,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் சிலருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக,கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் உடலின் நோய்எதிர்ப்பு சக்தி குறைகிறது.எனவே,கொரோனாவில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு அதிகம் ஆளாகின்றனர்.

இந்த கரும்பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்வலி,கண் வீக்கம்,அதன் பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது.குறிப்பாக,சிலருக்கு  மூக்கில் ரத்தம் வருதல்,மூளையிலும் பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழக்க வேண்டிய சூழலும் உண்டாகிறது.

அந்தவகையில்,இன்று காலை தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியை சேர்ந்த 57 வயதுடைய முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,தற்போது மதுரையிலும் இதுவரை 50 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து,மதுரை அரவிந்த மருத்துவமனை கண் மருத்துவர் உஷா கிம்  கூறியதாவது,”கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது”, எனக் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்