சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை குழு ஒன்றரை ஆண்டுகள் விசாரணை செய்தும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. அதற்குள் அடுத்தாக ஓர் முகம்சுழிக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில்நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ஓர் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் மோட்டார் அமைத்து அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படும். அங்குள்ள 100 குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த திறந்தவெளி குடிநீர் கிணறு தான் உள்ளது.
இப்படி இருக்கும் இந்த கிணற்றில், மதுபோதையில் சில மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். கிணற்றின் மீதுள்ள தடுப்பு சுவற்றின் மீது மனித மலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…