இந்தியாவில்,கொரோனா 3 ஆம் அலையானது குழந்தைகளுக்கு அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா ஒரு கொடிய கொரோனா இரண்டாவது அலைகளின் தாக்கத்தினால் தற்போது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்,அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் புதன்கிழமையன்று இதுப்பற்றி கூறுகையில்,”வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மூன்றாம் கட்ட அலையானது தவிர்க்க முடியாததாக இருக்கும்.ஆனால்,இந்த 3 ஆம் கட்ட கொரோனா அலை பரவலானது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே,புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்”,என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து,இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை குழந்தைகளை மோசமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி,கொரோனா வைரஸின் முதல் அலையானது வயதானவர்களைத் தாக்கியது.அதன்பின்னர்,கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில்,கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவலில் குழந்தைகள் அதிகம் பாதிககப்படுவர்.அதுமட்டுமல்லாமல்,இந்த கொரோனா 3 ஆம் அலையானது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.எனவே,பெற்றோர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்காரணமாக,கனடாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது ‘ஃபைசர் பயோஎன்டெக்’ என்ற கொரோனா தடுப்பூசி வழங்க அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது,மேலும் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை அடுத்த வாரத்திற்குள் அங்கீகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…