உணவு பரிமாறுவதில் தகராறு.. கோவை கல்லூரி மாணவர்களும் வடமாநில தொழிலாளர்களும் மோதல்.!
கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே உணவு பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து இருதரப்பினர் இடையே சமரசம் செய்து வைத்தனர்.
கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் பகுதி அருகே கண்ணம்பாளையம் எனும் ஊரில் செயல்ப்பட்டு வரும் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கும் விடுதியில் நேற்று இரவு கேன்டீனில் வழக்கம் போல மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வந்துள்ளது.
கேன்டீன் தகராறு : அந்த கேன்டீனில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள் என தெரிகிறது . உணவு பரிமாறுவது தொடர்பாக மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட அது கைகலப்பாக மாறியது. இதில் வடமாநில தொழிலார்கள் மற்றும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
காவல்துறையினர் சமரசம் : இதனை அங்குள்ள சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றிவிட்டனர். இதற்கிடையில் மாணவர்களுக்கும் தொழிலாளாளர்களுக்கும் இடையேயான பிரச்சனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் அவர்கள் உடனே வந்து இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.
இதற்கு முன்னர் , திருப்பூரில் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்மாநில தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு வந்து அந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வைராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.