மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.
மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறையும் தமிழக அரசும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோவையில் திட்டுமிட்டு மதமோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முகாம் நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்முகாமை பார்வையிடச் சென்ற கோவை காவல் துணை ஆணையரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து ரகளை செய்ததுடன், அவரை தாக்கும் நோக்கோடு கீழே தள்ளியுள்ளனர்.
மத நிகழ்வுகள் கல்வி கூடங்களில் நடத்தக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு கோவை மாநகர காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே காவல்துறை அதிகாரியையே தாக்கியுள்ளனர்.
எனவே, காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மதமோதலை உருவாக்கும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், சதி வேலைக்கு திட்டமிட்டு நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பயிற்சி முகாமை உடனடியாக ரத்து செய்வதுடன், இந்த அமைப்பினர் மீது சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டும். இந்த முகாமிற்கு அனுமதித்த அளித்த பள்ளி நிர்வாகததின் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…