[Representative Image]
கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த நபர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித் , சைமன், ரித்தீஷ் ஆகிய 3 பெரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், அவர்கள் சொந்த ஊரான ரத்னபுரி நோக்கி சென்று கொண்டு இருக்கையில், கோவை ராம் நகர் அருகே, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த 3 பேர் சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதனை அடுத்து நிலை தடுமாறி விழுந்த 3 பேரையும் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ரஞ்சித், ரித்தீஷ் ஆகியோர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக அந்த இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் தப்பியோடிவிட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ரஞ்சித் , சைமன், ரித்தீஷ் ஆகியோர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகளும் பதியப்பட்டு இருந்துள்ளதால், எந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கொலை முயற்சி தாக்குதலை நடத்தினார்கள் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…