கோவையில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!
கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. மேலும் அதன் பரவும் தீவிரமும் குறைந்திருந்தது.
அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில், தற்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோவையில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதி
அதன்படி கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோவை ஆட்சியர் பொதுமக்கள் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளார்.