சென்னை:இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்தது.
இந்நிலையில்,சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்றும் அதில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல் ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்கப்படுவது, வாகன ஓட்டிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…