இல்லத்தரசிகளுக்கு ஷாக்….தங்கம் விலை உயர்வு;சவரன் எவ்வளவு தெரியுமா?..!

Default Image

சென்னை:22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஆனால்,தங்கம் விலையில்,நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.அந்த வகையில்,சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து,ஒரு சவரன் ரூ.36,064-க்கும்,கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,508-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு ஷாக் அளிக்கும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,525-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, ஒரு கிராம் ரூ.66.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்