செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ்! 3 நாட்களில் இவ்வளவு விண்ணப்பமா?

Published by
பால முருகன்

சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் 5 வயது சிறுமியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போலவே, மற்ற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள மற்ற பகுதிகளிலும் தெருவில் இருக்கும் நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்த சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும் இருந்தது. அதில் குறிப்பாக  சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கண்டிப்பாக அதற்கான உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெற தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இணையதள வாயிலாகவும் ரூ50 செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம்,  என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற கடந்த 3 நாட்களில்   2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெற  http://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டு வெளியான நாளில் இருந்து விண்ணப்பம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

அதன்படி, கடந்த 10 மாதத்தில் ஆன்லைன் மூலம் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற்ற நிலையில், இது கட்டாயமாக்கப்பட இந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

5 minutes ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

42 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி உயிரிழப்பு எதிரொலி! பள்ளிக்கு சீல்!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…

1 hour ago

Bye Bye ஸ்டாலின்.., 2026-ல் திமுகவுக்கு பெரிய ‘ஓ’! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

2 hours ago