காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள் -அமைச்சர் விஜயபாஸ்கர்
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் 3,900 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .இந்திய அளவில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு .
டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக அரசு மருத்துவர்கள் குழு உள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.