குடும்ப தகராறின் போது போதையில் மர்மஉறுப்பு வெட்டுப்பட்டு இளைஞர் பலி..!

சென்னை அயனாவரத்தில் உள்ள கூலித்தொழிலாளி மனோகர்(28).இவரது மனைவி சரிதா(23) என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துள்ளார். ஆனால் சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனோகர் மது குடித்துவிட்டு சரிதாவை அடிக்கடி அடித்தும் , துன்புறுத்தியும் வந்துள்ளார்.
சரிதா அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் சரிதா தனது தாய் வீட்டில் இருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு மனோகர் வந்துள்ளார். அப்போது அவர் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே உறவினர் ராகவேந்திரன் வந்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட மனோகர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்க முயன்றபோது அவரது ஆணுறுப்பு மற்றும் வயிற்றில் கத்தி கிழித்தது.
பின்னர் கத்தியை எடுத்து ராகவேந்திரரை மனோகர் குத்தியுள்ளார். இதை தொடர்ந்து காயமடைந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் மனோகர் இறந்து விட்டார். காயமடைந்த ராகவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024