கூடுதலாக 2 மதிப்பெண்…..அசத்தும் பள்ளிக்கல்வித்துறை…குதூகலத்தில் மாணவர்கள்…!!
சமீபகாலமாக தமிழக கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்துவருகின்றது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறைக்கென்று நீங்கா இடம் இருந்து வருகின்றது.அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ , மாணவிகள் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டால், அவர்களுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு மதிப்பெண்கள் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அனைத்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் மரம் வளர்த்தல் ஒரு பாடத்திற்கு கூடுதலாக இரண்டு மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும்.
மாணவர்கள் சுற்றுசூழலை பாதுகாக்க மரம் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வி துறை அறிமுகம் செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.