பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
இன்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் அவர்களது 118-ஆவது பிறந்தநாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர்! பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி!’ என ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் அவர்களது 118-ஆவது பிறந்தநாள் இன்று!
உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர்!
பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி! pic.twitter.com/zKT1Q9b3WZ
— M.K.Stalin (@mkstalin) September 27, 2022