ஒரே நாளில் ‘தங்கம் விலை’ சவரனுக்கு 728 உயர்வு…கடும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

Gold price today

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்து மீண்டும் ரூ.45,000ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648க்கும், கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின்  ரூ. 1.30 உயர்ந்து ரூ.81.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை ரூ. 120 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்