கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இருந்து NDA கூட்டணி சார்பில், எம்.பி.க்களை அனுப்புவோம் என எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை என்பது வருத்தம்.
ஏதேனும் தவறு இருந்தால் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விவாதிப்போம். மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர எம்.பி.க்களை ஆதரிப்போம். இந்தத் தேர்தலை ஒரு பாடமாகப் பார்க்கிறோம், முன்பை விட சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்.
நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3 முனை போட்டியில் இருந்து 2 முனை போட்டியாக மாறினால் தான், பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று கூறிஉள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…