121 ஆண்டுகளில் 12 புயல்கள்.. மாண்டஸ் 13வது புயல்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
கடந்த 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் கடந்தால் 13வது புயலாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது நகர்ந்து வரும் மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் கடற்கரையில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.
இதுகுறித்து வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாளை காலை மாமல்லபுரத்தில் இந்த புயல் கரையை கடக்கும். தற்போது வரையில் 70 கிமீ முதல் 80 கிமீ வரையில் காற்றின் வேகம் இருக்கிறது.
கடந்த 1891 முதல் 2021 வரையில் 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. சென்னை – புதுவை கடற்கரைக்கு இடையே இந்த மாண்டஸ் புயல் கடந்தால் இது 13வது புயல்கள் ஆகும். அதிகாலை வரையில் புயலின் தாக்கம் இருக்கும். அதன் பிறகு மீதம் இருக்கும் காற்று வீசும். கடந்த 24 மணிநேரத்தில் கொடைக்கானலில் 5 செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது . ‘ என வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.