நாட்டிலேயே இதுவே முதல்முறை.! கூட்டுறவு வங்கிகளில் IMPS முறையில் பணப்பரிவர்த்தனை.!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் ஐஎம்பிஎஸ் (IMPS) முறையில் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து பிரதான வங்கிகளிலும் இணையதள பணபரிவர்தனையை ஊக்குவிக்கும் வகையியல் ஐஎம்பிஎஸ் (IMPS) எனும் வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனை குறிப்பிட்ட தொகை வரையில் மட்டும் அனுமதிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை முறைகளை எளிதாக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
IMPS :
இந்த முறையானது மத்திய மாநில கூட்டுறவு வங்கிகளில் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழகத்தில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் ஐஎம்பிஎஸ் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
UPI பணப்பரிவர்த்தனை :
அதேபோல, அடுத்ததாக பணபரிவர்த்தணையை மேலும், எளிதாக்க UPI (கூகுள் பே, போன் பே, பே டிஎம் போல) முறையிலும் பணப்பரிவர்த்தனைமேற்கொள்ள அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது.