பத்திரபதிவில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை -அமைச்சர் மூர்த்தி
பத்திரபதிவில் முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடு நடந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 2016 முதல் 2021 வரை பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படையாகவே முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்படும். 6 மாதங்களில் பத்திரப்பதிவு முறை எளிமையாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடு செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா கொண்டுவரப்படும் என்றும், முறைகேட்டில் தொடர்புடைய பிற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டு சிறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.