#Breaking: இ-பாஸ் நடைமுறை தொடரும்.. எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள், வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல்,
- கோயம்பேடு உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய சந்தைகளில் சில்லறை வியாபாரிகளுக்கு தடை.
- திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
- வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் இரவு 8 மணி வரை வழிபாட்டு நடத்த அனுமதி.
- வணிக வளாகங்கள், காய்கறி கடை, பெரிய மளிகை கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- உணவகங்கள், டீ கடைகளுக்கு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை அனுமதி.
- கேளிக்கை விடுதிகளில் 50 சதவித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- பொழுதுபோக்கு பூங்கா, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
- திருமண விழாவில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும்.
- இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி.
- மாவட்ட பேருந்துகள், மாநகர பேருந்துகளில் பயணிகள் நின்று பயணிக்க அனுமதி இல்லை. இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி.
- விளையாட்டு போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.
- வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்.
- சின்னத்திரை, திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற அனுமதி. திரைப்பட நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதை உறுதி செய்ய வேண்டும்.
- உள் அரங்கங்களில் நடைபெறும் கல்வி, அரசியல், கலாச்சாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
- டாக்ஸியில் ஓட்டுனரை தவிர்த்து 3 பேருக்கும், ஆட்டோவில் ஓட்டுனரை தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி.
- நோய்கட்டுப்பாடு பகுதிகளில் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு தொடரும்.
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு #BREAKING | #coronavirus | #lockdown2021 | #lockdown | #TamilNadu pic.twitter.com/0VSbdoTTWZ
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 8, 2021