அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள்! திமுக தலைமை அதிரடி அறிவிப்பு

அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ்செல்வன்.
’தலைமைக் கழக அறிவிப்பு’
கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் திரு. தங்க.தமிழ்செல்வன் அவர்கள் நியமனம்;
கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பில் திரு. வி.பி.கலைராஜன் அவர்கள் நியமனம்;
கழக நெசவாளர் அணிச் செயலாளர் பொறுப்பில் திரு. கே.எம்.நாகராஜன் அவர்கள் நியமனம். pic.twitter.com/eNxiJRf6zY
— DMK (@arivalayam) August 30, 2019
இவருக்கு தற்போது திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இவர் அமமுகவில் இருந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவிலும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வனை போல அமமுகவில் இருந்து விலகி வந்தவர் வி.பி.கலைராஜன்.இவருக்கு திமுகவில் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி திமுக வந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.