பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் 43.634 விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். இதுவரை 10 தவணை வரை விவசாயிகள் தொகைகளை பெற்றுள்ளனர். 11வது தவணை தொகையை பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம் என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகள் pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் கடவு எண் மூலம் புதுப்பிக்க வேண்டும். ஆதாருடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் ஆதார் விபரங்களைக் கொண்டு விரல் ரேகையினை பதிவு செய்து பார்த்திருக்க வேண்டும். இ-சேவை மையங்களில் இதற்கான கட்டணம் ரூ.15 மட்டுமே. விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விபரங்களை வரும் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …