சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 மற்றும் 5 ஆம் கட்ட ஊரடங்கில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது சலூன் கடைகள், அழகு நிலையங்கள், ஸ்பா நிலையங்களுக்கு செல்பவர்கள் ஆதார் அட்டையை கொண்டு செல்வது அவசியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் விவரங்களை சலூன் கடைக்காரர்கள் குறித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சலூன் கடைகளில் முடிவெட்ட செல்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவே இந்த ஏற்பாடு என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…