முக்கிய அறிவிப்பு வெளியாகுமா..? இன்று மீண்டும் ஆலோசனை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..? மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. நேற்று அமைச்சர் செங்கோட்டையன் உடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.