முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
தேர்வு எப்போது?:
இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மே 21ம் தேதி (சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
காலிப்பணியிடங்கள்:
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும்,நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் பிப். 23-ஆம் தேதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும் மார்ச் 23 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அறிவிப்பாணை:
அதன்படி,குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டது.இதனையடுத்து,பிப். 23-ஆம் தேதி முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இன்றே கடைசி நாள்:
இந்நிலையில்,குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மார்ச் 23 ஆம் தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தபடுகிறார்கள்.மேலும்,இது தொடர்பான முழு விவரங்களை பெற http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…