திருவண்ணாமலை மக்களவை தொகுதி ..ஓர் பார்வை..!

Thiruvannamalai Lok Sabha Constituency

திருவண்ணாமலை தொகுதி மக்களவைத் தேர்தலை 4-வது முறையாக சந்திக்க உள்ளது.  கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு வேலூர் மக்களவைத் தொகுதி பகுதிகளையும், நீக்கப்பட்ட வந்தவாசி மக்களவை தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இந்த மறுசீராய்வானது நடைபெற்றது.

மறு சீராய்வு :

தற்போது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

விவசாய பூமி :

டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக விவசாய அதிகம் கொண்ட பகுதியாக திருவண்ணாமலை வட்டாரம் உள்ளது. இங்கு உயர்தர நெல் பாசனம், நன்பயிர்களான கரும்பு, வாழை, உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள்,  புன்செய் பயிர்களான சோளம், கம்பு, வேர்கடலை உள்ளிட்ட விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

அண்மைகாலமாக நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கணிசமான அளவில் குறைந்து கொண்டே வருகின்றனர். இதனால் அங்குள்ள இளைஞர்கள் அருகில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வேலைக்குச் செல்லும் நிலைமையும் இங்கு நிலவுகிறது. இருந்தும் 50%க்கும் மேலானோர் தற்போதும் விவசாயத்தை நம்பியே இங்கு இருக்கின்றனர்.

READ MORE- ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி… ஓர் பார்வை…!

கணிக்க முடியாத வெற்றி :

2008க்கு பிறகு மறுசீரமைப்புக்கு பிறகு பிரிக்கப்பட்ட தொகுதி என்பதால் தற்போது வரை மூன்று மக்களவைத் தேர்தல்களை மட்டுமே திருவண்ணாமலை சந்தித்து உள்ளது. இதனால் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாக யாரும் கணிக்க முடியாத நிலைமை தான் இங்கு நிலவுகிறது.

திமுக ஆதிக்கம் :

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை கணக்கிட்டு பார்த்தால் இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தான் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 1996 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுகவின் ஆதிக்கம் தான் நிலவுகிறது.

முதல் தேர்தல் :

கடந்த 2009ஆம் ஆண்டு திமுகவின் வேணுகோபால் 1.48 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி கண்டுள்ளார்  . பாமகவை சேர்ந்த காடுவெட்டி குரு எனும் செ.குரு இந்த தேர்தலில் தோல்வியடைந்தார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வனரோஜா வெற்றி பெற்றார் திமுகவின் சி.என்.அண்ணாதுரை தோல்வியடைந்தார். திமுக , அதிமுக என மாறி மாறி இந்த தொகுதியில் வெற்றி நிலவரம் இருந்துள்ளது.

2019 தேர்தல் முடிவுகள் :

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த சி. என். அண்ணாத்துரை வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்,  சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  திமுக வேட்பாளர்  சி. என். அண்ணாத்துரை அதிமுக வேட்பாளர் எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தியை  3,04,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் சி. என். அண்ணாத்துரை 6,66,272 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி  3,62,085 வாக்குகளும் பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் :

திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம் குறித்து இதில் பார்க்கலாம்.

தொகுதிகள் வெற்றி தோல்வி
ஜோலார்பேட்டை க. தேவராசு (திமுக)
கே. சி. வீரமணி (அதிமுக)
திருப்பத்தூர் அ. நல்லதம்பி (திமுக)
டி. கே. ராஜா (பாமக )
செங்கம் (தனி) மு. பெ. கிரி (திமுக)
நைனாக்கண்ணு (அதிமுக)
திருவண்ணாமலை எ. வ. வேலு (திமுக )
எஸ். தணிகைவேல் (பாஜக )
கீழ்பெண்ணாத்தூர் கு. பிச்சாண்டி (திமுக)
செல்வக்குமார் (பாமக )
கலசப்பாக்கம் பெ. சு. தி சரவணன் (திமுக)
வி. பன்னீர்செல்வம் (அதிமுக)

வாக்காளர்கள் விவரம் :

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம்
7,49,000 7,72,669 118 15,21,787

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்