ஓய்ந்தது மழை… வடியும் தண்ணீர் – மின்சாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது.
இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில் சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு விலகி ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி சென்றுவிட்டது.
இன்று முற்பகல் ஆந்திர மாநிலம் பாபட்லா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை விட்டு புயல் விலகியதால், மழை நின்றுள்ளது. இதனால், சாலையில் முறிந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்பட்டு, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகிறன்றனர்.
மிக்ஜாம் புயல் : இன்று மாலைக்குள் முக்கால்வாசி மீட்பு பணிகள் நிறைவுபெரும்.! அமைச்சர் KKSSRR பேட்டி.!
இதன்காரணமாக தண்ணீர் வருகிறது. ஆனால், சில இடங்களில் தண்ணீர் வடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அதனை சீரமைத்து மின்விநியோகம் பணிகளும் தொடங்கியுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எங்கெல்லாம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
நிவாரண முகாமை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அவரது பதிவில், சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S & P பொன்னியம்மன் நகர் மற்றும் சென்னை மத்திய மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, லஸ், இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம் ஆகிய பகுதிகள்.
சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகள், சென்னை தெற்கு – I மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர் ஒரு பகுதி மற்றும் சென்னை தெற்கு – II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகியவற்றின் ஒரு பகுதி என்றும் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது எனவும் கூறினார்.