பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Meenakshi Thirukalyanam

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8, 2025 அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. திருக்கல்யாண நிகழ்வை நேரில் காண விரும்புவோர் இணையதளம் வழியாக கட்டணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெறுவது தொடர்பாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ.200, ரூ.500 மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை (மே 8) காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என இருவகையான டிக்கெட்டுகள் கிடைக்கிறது.  ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணச்சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர்.

திருக்கல்யாணம் காணவிருக்கும் பக்தர்கள் hrce.tn.gov.in மற்றும் maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை முன்பதிவு செய்யலாம். ரூ.500 கட்டணச்சீட் டு ஒரு நபருக்கு இரண்டும், ரூ.200 கட்டணச்சீட்டு மூன்றும் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நபர் இரண்டையும் பெற இயலாது. இந்த டிக்கெட்டை பெற, ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். கோயில் அருகே மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் விடுதியில் நேரடியாகவும் கட்டணச்சீட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்