இன்று 10-வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.!
வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செல்ல மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்த விளக்கம் இன்று வெளியிடப்படும் என கடந்த வாரம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்றும் மேலும், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பு அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செல்ல மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதுதொடர்பான விளக்கம் இன்று (அதாவது 19 ஆம் தேதி) வெளியிடப்படும் என கடந்த வாரம் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இதனால் இதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.