தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் – அறநிலையத்துறை உத்தரவு.!
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஹோமம், பாராயணம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்ய அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் யாகங்களில் பொதுமக்கள் பங்கேற்க கூடாது எனவும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1251 பேர் பாதிக்கப்பட்டு, 32 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து 74 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 1 மற்றும் 4ஆம் தேதிகளில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.