#BREAKING: உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி -முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசு ஒதுக்கி தடுப்பூசி போதிய அளவில் இல்லை, 18 வயதினருக்கு செலுத்துவதற்கு தடுப்பூசி போதிய அளவில் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான மத்திய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவு குறைவாக உள்ளது. மத்திய அரசால் ஆக்சிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. போதிய அளவு உற்பத்தி அலகுகளை அமைக்கவும் பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பெறவும் நடவடிக்கை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மே1-ம் தேதி திட்டமிட்டப்படி 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு..!#CoronaVaccine | #TNGovt pic.twitter.com/sl669mXbW1
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 12, 2021