வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து இறக்குமதி -எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை..!
வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான ‘அம்போடெரிசின்-பி’ மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சருக்கு எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை பிளாக் பங்கஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.அதாவது,கொரோனா நோயாளிக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.
இதனால்,கண்,மூக்கு உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைகிறது.மேலும், மூளையை தாக்கி செயலிழக்க வைத்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மேலும்,தமிழகத்தில் இதுவரை 38 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான ‘அம்போடேரிசின்-பி’ மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சருக்கு எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”பெருந்தொற்றுச் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்றும் தீவிரமாகி உள்ளது.அதற்கு ‘லிப்போசோமல் அம்போடேரிசின் பி’ மருந்து தேவை.நம் நாட்டில் உடனே உற்பத்தி செய்யமுடியாது.மேலைநாடுகளில் எளிதில் கிடைக்கக்கூடிய இம்மருந்தை விரைந்து இறக்குமதி செய்து உயிர்களை காப்பது அவசியம்”,என்று தெரிவித்துள்ளார்.
#Covid பெருந்தொற்றுச் சூழலில் கருப்பு பூஞ்சை தொற்றும் தீவிரமாகி உள்ளது.அதற்கு ‘லிப்போசோமல் அம்போடேரிசின் பி’ மருந்து தேவை.நம் நாட்டில் உடனே உற்பத்தி செய்யமுடியாது.மேலைநாடுகளில் எளிதில் கிடைக்கக்கூடிய இம்மருந்தை விரைந்து இறக்குமதி செய்து உயிர்களை காப்பது அவசியம்@drharshvardhan pic.twitter.com/cl0O9quE9B
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 25, 2021