அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதன்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்.
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும். சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…