அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்துக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், திட்டங்களை வகுத்து அதன் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்கு சென்றைடையும் வகையில் திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செய்லபடுத்த வேண்டும் என்றும் மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட முதல்வர், மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்த்தரவு (Real Time Data) ஒன்றை நிறுவ வேண்டும். ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கு ஏற்ப தொலைநோக்கு திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025