Chief Minister's letter [image source:x/@arivalayam]
இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது என்று களம் காணட்டும் கழகப்படை என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செய்கின்ற வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில் நாள்தோறும் சாதனைத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றக்கூடிய வகையில் நமது அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருகின்றன. அதே நேரத்தில் மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இருக்கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருக்கிறது.
அரசியலில் விஜய்.. தம்பியை தட்டி கொடுக்க வேண்டும்.! சீமான் பேச்சு..!
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான மதவாதக் கொள்கை கொண்ட ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி உருவாகி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு, புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கான கட்டமைப்பை இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம்.
மிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளது. மதவாத கொள்கை கொண்ட பாஜக ஆட்சியை அகற்றிட இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதிமுக – பாஜகவின் கள்ள கூட்டணியை திமுக தொண்டர்கள் அமல்படுத்த வேண்டும். மத்திய பாஜக அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக சிஏஜியால் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.! இபிஎஸ் கடும் கண்டனம்.!
பாஜகவுடன் கூட்டு சேர்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துரோகம் செய்துள்ளது அதிமுக. இப்போது கூட்டணி முறிந்துவிட்டதாக வேடம் போடும் அதிமுகவின் கள்ள கூட்டணியை அமல்படுத்த வேண்டும். அதிமுக – பாஜக கள்ள கூட்டணியை அமல்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று திமுக தொண்டர்கள் பணி மேற்கொள்ளும். உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக தான். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான். ஜனநாயகம் காப்பதில் உறுதியாக உள்ள தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…