பெட்ரோல்,டீசல் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்
வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது . இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உயர்விற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.ஊரடங்கு நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பது நியாயமா? முறையா? இதனால் விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும். வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் @CMOTamilNadu #Lockdown நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பது நியாயமா? முறையா?
இதனால் விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்!
வரி உயர்வை உடனே திரும்பப் பெறுக!
— M.K.Stalin (@mkstalin) May 3, 2020