இன்னும் 6 மணிநேரத்தில்., நெருங்கும் புயல்! வானிலை ஆய்வு மையம் தகவல்! 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 6 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Update in Tamilnadu

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், நாகை முதல், காரைக்கால் , சென்னை வரையிலான கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

புயல் குறித்த தற்போதைய நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காலை 11.30 மணிநேர நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 110கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து தென்கிழக்கே 350 கி.மீ தொலைவிலும்,  புதுச்சேரிக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்