வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலமானது வடக்கு வடகிழக்கில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.